Kathir News
Begin typing your search above and press return to search.

கேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா.? முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.!

கேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா.? முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.!

கேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா.? முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2019 6:26 AM GMT


நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டதற்கே, ஏதோ சரித்திர சாதனை படைத்தது போல பீற்றிக்கொண்ட திமுக எம்.பிக்கள், நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை கண்டு வயாடைத்து போய் நின்றனர்.


பாராளுமன்றத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார்.


இதனை திரு திருவென விழித்துக்கொண்டே பார்த்த திமுக எம்பிக்கள் 'நாம் வெறும் தமிழ் வாழ்க என்று எளிதாக வாயில் வந்ததை கூறி அரசியலாக்க நினைத்தோம், இவர்கள் புறநானூறு மேற்கோள் வேறு கூறுகிறாரே, எப்படி சமாளிப்பது என்ற மனதில் நினைத்தவாறே பீதியில் அமர்ந்திருந்தனர்.


இடையில் புறநானூற்று செய்யுளைச் சொல்லி விட்டு நிர்மலா சீதாராமன் அவர்கள் அதற்குஅர்த்தம் என்ன என்று கேட்டு விட்டு சிறிது நேரம் இடைவெளி விடுகிறார். அதற்குதமிழ் வாழ்க கோஷம் போட்ட தமிழக எம்.பி க்கள் பதில் சொல்லாமல் (சொல்லத்தெரியாமல் ) அசடு வழிய சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கனிமொழி , சு.வெங்கடேசன் , தமிழச்சி தங்கபாண்டியன் , ஜோதிமணி போன்றோருக்கு இலக்கியவாதிகள் என்ற பில்டப் வேறு.


இத்த‌னைக்கும் இது நம் பாடத்திட்டத்தில் வரும் செய்யுள். பட்ஜெட் உரை படிக்கும்போது இடையே மற்றவர் பேசுவது மரபு இல்லைதான். ஆனாலும் கூட அதன் அர்த்தம் என்று நிதியமைச்சர் கேட்டபோது பேரவைத் தலைவர் அனுமதித்தால் , அதன் அர்த்தத்தை விளக்க நான் தயார் என்று யாராவது ஒரு தமிழக எம்.பி எழுந்து நின்றிருந்தால் எவ்வளவு கெத்தாக இருந்திருக்கும். அதுக்கெல்லாம் கொஞ்சமாவது தமிழறிவு இருக்கனும். தமிழை வைத்து அரசியல் செய்தால் மட்டும் போதாது.


இதில் உச்ச கட்டமாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியான், அவை நிகழ்வுகள் அனைத்திலும் உறங்கி கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது. முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால், இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே உறங்கி கொண்டிருந்தது எவ்வளவு இழிவான செயல். தமிழில் முனைவர் பட்டம் வாங்கியதாக கூறப்படும் தமிழச்சி, அவை நிகழ்வுகளை கவனித்திருந்தால், எளிமையான புறநானூறு பாடலுக்கு கூடவா விளக்கம் சொல்லாமல் இருந்திருப்பார் என்று பலரும் காட்டமாக கேள்விஎழுப்பி வருகின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News