Kathir News
Begin typing your search above and press return to search.

“வைகோ மீது தேசத்துரோக வழக்கு போட்டது திமுக அரசு; தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை” - திமுகவை கிழித்தெடுத்த கஸ்தூரி !!

“வைகோ மீது தேசத்துரோக வழக்கு போட்டது திமுக அரசு; தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை” - திமுகவை கிழித்தெடுத்த கஸ்தூரி !!

“வைகோ மீது தேசத்துரோக வழக்கு போட்டது திமுக அரசு; தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை” - திமுகவை கிழித்தெடுத்த கஸ்தூரி !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2019 10:23 AM GMT



கடந்த 2009 - ஆம் ஆண்டு, “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்ததாகவும் அப்போதைய திமுக அரசு, வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்தது.


இவ்வழக்கு விசாரணையானது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..


இந்த வழக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


வைகோ தேச துரோகி என்று தீர்ப்பளிக்கப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது 2 பதிவுகளில் குறிப்பிட்டு இருப்பதாவது: -



2009 - இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார்?


- அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை.




https://twitter.com/KasthuriShankar/status/1147021453109420037



எண்ணையை தடவிக்கிட்டு மண்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி.


எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி.


டெல்லிக்கு அனுப்ப சொன்னா, திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்!


எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே!


https://twitter.com/KasthuriShankar/status/1147020301382950914



இவ்வாறு கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கததில் பவிதிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News