Top
undefined
Begin typing your search above and press return to search.

முஸ்லிம்கள் அதிகமாக கிளிநொச்சியில் குடியேறினார்களா? கிளிநொச்சியில் ராணுவத்தினர் குவிப்பு!

முஸ்லிம்கள் அதிகமாக  கிளிநொச்சியில் குடியேறினார்களா? கிளிநொச்சியில்  ராணுவத்தினர் குவிப்பு!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 July 2019 6:11 AM GMT


இலங்கையில் ஈஸ்டர் திருவிழாவில் பல்வேறு தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு முஸ்லீம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது இதில் 200 கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சோகத்தில் இருந்து இலங்கை மக்கள் தற்போது தான் மீது வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை முழுவதும் முழுவதும் ராணுவ சோதனைகள் நடத்தப்பட்டது. தற்போது அமைதியாக இருந்து வரும் நிலையில் நேற்று (6ம் தேதி) இரவு முதல் கிளிநொச்சியில் திடீரென இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டனர்.


குறிப்பாக முக்கொம்பன் கிராமத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் அதிகமாக குடியேறினார்கள் என தகவல் வந்ததையொட்டி இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இந்த சோதனை குறித்து இலங்கை ராணுவம் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை. தீடிரென ராணுவத்தினர் வருகை அங்கு வாழும் மக்கள் மத்தியில் ஏதும் நடக்க போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.


கிளிநொச்சியை பொறுத்த வரை இலங்கை வட மாகாண பகுதி ஆகும். யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து சுமார் 65 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. விடுதலை புலிகள் கிளிநொச்சியில் 2009 வரை முழு ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது


Next Story