Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசத்துரோகியை எம்.பி ஆக்க துடிக்கும் தி.மு.க : இஸ்லாமியருக்கும், அருந்ததியருக்கும் வாய்ப்பு அளிக்கும் அ.தி.மு.க

தேசத்துரோகியை எம்.பி ஆக்க துடிக்கும் தி.மு.க : இஸ்லாமியருக்கும், அருந்ததியருக்கும் வாய்ப்பு அளிக்கும் அ.தி.மு.க

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 July 2019 6:44 PM GMT


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.


தி.மு.க சார்பில் ஒரு இடம் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த உறுப்பினர் பதவிக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடுவதற்கு சட்டசிக்கல் இல்லை என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.


அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க-விற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி ஒதுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு பா.ம.க சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





அ.தி.மு.க-வில் உள்ள சிறுபான்மை நலப்பிரிவின் இணை செயலாளராக இருப்பவர் முகமதுஜான் தற்போது மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.


முகமது ஜான் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்தை சேர்ந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2011ல் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் முகமதுஜான். அதோடு வேலூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.


மேலும், சேலம் புறநகர் மாவட்டம், மேட்டூர் நகர செயலாளர் திரு சந்திரசேகரன் மற்றுமொரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் நகர செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். மேலும் மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார்.


இவரது மனைவி பெயர் ரேணுகா. இவர் மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சந்திர சேகரனுக்கு டாக்டர் பூர்ணிமா, ரேகா என்ற 2 மகள்களும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.


இதில் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.




https://twitter.com/GunasekaranMu/status/1147401512458444801?s=19


அ.தி.மு.க வேட்பாளர்கள் குறித்து பல யூகங்கள் உலா வந்த நிலையில், அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்து செல்வதில் அ.தி.மு.க முனைப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story