Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வில் குடும்ப ஆட்சி இல்லை. உழைக்கும் தொண்டர் களின் ஆட்சி நடைபெறுகிறது : மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பா.ஜ.க வில் குடும்ப ஆட்சி இல்லை. உழைக்கும் தொண்டர் களின் ஆட்சி நடைபெறுகிறது  : மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 July 2019 3:58 AM GMT


இந்தியா முழுவதும் பா.ஜ.க வில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தமிழகத் தில் பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, சென்னை வள்ளுவர் கோட்டதில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்று, உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சுப்பிரமணியம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். உறுப்பினர் சேர்க்கைக்கான வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கூறியதாவது : பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுத்தி வரும் நலதிட்டங்களால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் தாமரை மலரும்


பா.ஜ.க ஆட்சியில் 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 4 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மத்திய அரசு ரூ.1 விடுவித் தால், கடைக்கோடி மக்களை 15 பைசா மட்டுமே வந்தடைந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் மத்திய அரசு ரூ.100 விடுவித்தால், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், கடைக்கோடி பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ.100 முழுமையாக சென்றடைகிறது. இதை ஏழை மக்கள் உணர்ந்துள்ளனர்.


அதனால் தான் மீண்டும் பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும்.


வேறு கட்சிகள் குடும்பங்கள் ஆள்கின்றன. ஒரு மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் இரு கட்சிகள், மற்றொரு மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 3 கட்சிகள் உள்ளன. ஆனால் பா.ஜ.க வில் குடும்ப ஆட்சி இல்லை. உழைக்கும் தொண்டர் களின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.


Next Story