Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியுரிமை வழங்க நடவடிக்கை வேண்டும் !! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை !!

குடியுரிமை வழங்க நடவடிக்கை வேண்டும் !! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2019 6:11 AM GMT


இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பாளர் தமிழழகன் வலியுறுத்தி உள்ளனர்.


திருச்சி மேலபுலிவார்டு சாலையில் உள்ள தனியார் அரங்கில் தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தமிழழகன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் இலங்கை அகதிகள் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகதிகளுக்கு என்று மறுவாழ்வுச் சட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் வசதிகளையும், வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, கடன் உதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியரகத்திலும் குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன


Next Story