Top
undefined
Begin typing your search above and press return to search.

கஜானாவை துடைத்துவிட்டு போன கருணாநிதி - 108 ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடியான எம்.ஜி.ஆர் : கலங்க வைக்கும் வரலாற்று பின்னணி.?

கஜானாவை துடைத்துவிட்டு போன கருணாநிதி - 108 ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடியான எம்.ஜி.ஆர் : கலங்க வைக்கும் வரலாற்று பின்னணி.?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2019 8:04 AM GMT


இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.


டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு 'விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்' தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது.


இத்திட்டத்திற்கு ஒதுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. இதற்கு முன்பு ஆட்சி செய்துவிட்டுப்போன கருணாநிதி தான் போகும்போது அரசாங்க கஜானாவையும் துடைத்து வைத்துவிட்டே போயிருந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதி நிலைமையை சரிசெய்துவரவே பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.


இந்திலையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி. இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 50 லட்ச ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். முதல்கட்டமாக 1 ஆம்புலன்ஸ்சுக்கு ரூ60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும்,உயிர்காக்கும் கருவிகளும்,மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது 1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள்,39 அவசரசிகிச்சை மையங்கள்,போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் விரிவடைந்தது.


இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணிக்க காவல்துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமேஸ்வரன் போன்றோர்களை உறுப்பினர்களாகவும், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நடேசன் அவர்களை தலைவராகவும் கொண்டு கண்காணிப்பு குழுவையும் அமைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்டசில மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.


பிற்காலத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்திய அளவில் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த திட்டம்.


Next Story