Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு ! ராகுல் காந்தியை லோக்சபா முன் வரிசையில் அமரவைக்க விதிகளில் இடமில்லை!! நாடாளுமன்ற விவகாரத்துறை திட்டவட்டம் !!

காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு ! ராகுல் காந்தியை லோக்சபா முன் வரிசையில் அமரவைக்க விதிகளில் இடமில்லை!! நாடாளுமன்ற விவகாரத்துறை திட்டவட்டம் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 July 2019 6:16 AM GMT


ராகுல் காந்தி லோக்சபாவில் முன்வரிசையில் அமரும் வகையில் கூடுதல் இருக்கையை இணைத்து வசதி செய்து தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


இது குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற விவகாரத்துறை ராகுல்காந்தி தற்போது கட்சித்தலைவராக இல்லாததால் அவை சட்டவிதிகள்படி அவருக்கு முன்வரிசையில் அமரவைக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டது.




https://www.opindia.com/2019/07/government-rejects-congress-partys-demand-of-first-row-seat-for-rahul-gandhi-in-lok-sabha/


விதிகள்படி காங்கிரஸ் கட்சிக்கு முன்வரிசையில் 2 இருக்கைகள்தான் ஒதுக்க முடியும். அந்த 2 இடங்களையும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும், ஐக்கிய முன்னணி தலைவர் என்ற முறையில் சோனியா காந்திக்கும் வழங்கப்பட்டுள்ளது.


அதிக எம்பிக்களை பெற்றுள்ள கட்சியை சார்ந்தவர்கள் என்ற முறையில் முதல் வரிசையில் திருநாமுல் காங்கிரஸ் எம்.பி.ஒருவர், ஒய்.எஸ்.ஆர்..சி.பி. கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி. மற்றும் 2 மூத்த எம்பிக்களான பரூக் அப்துல்லா, முலாயம்சிங் யாதவ் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் முன் வரிசை நிறைவு பெற்று விடுகிறது.


இந்த நிலையில் ராகுல்காந்தியும் 2 வது வரிசையையோ அல்லது 3 வது வரிசையயோதான் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்திக்காக கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாதபோது முன் வரிசையில் அமரவைக்க முடியாது என நாடாளுமன்ற விவகாரத்துறை திட்டவட்டமாக கூறிவிட்டது.


லோக்சபா விதிகள் நூலில் கூறப்பட்டுள்ளபடி காங்கிரசுக்கு 2 இருக்கைகள்தான் முன் வரிசையில் ஒதுக்கப்படும் என அரசு தெளிவாக கூறியுள்ளது.


பாராளுமன்றத்தில் இருக்கை ஏற்பாடு செய்யப்படுவது இந்த முறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. மக்களவை நடவடிக்கைகள் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 4 ன் படி, உறுப்பினர்கள் சபாநாயகரால் நிர்ணயிக்கப்பட்ட வரிசையில் அமர வேண்டும். மேலும் சபாநாயகர் அவை ஒழுங்கு விதிகள் 122 (1) (அ) மூலம் இவற்றை வழி நடத்துகிறார்.


இடங்களை ஒதுக்க சபாநாயகருக்கு  முழு விருப்பம் இருப்பதாக விதிகள் கூறினாலும், கட்சிகளுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட  எண்ணிக்கைக்கு இருக்கைகள் ஒதுக்குவதை தீர்மானிக்க ஒரு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.  


Next Story