Kathir News
Begin typing your search above and press return to search.

சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது ..கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது இதுதான் !! அரசியலாளர்கள் திட்டவட்ட கணிப்பு !!

சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது ..கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது இதுதான் !! அரசியலாளர்கள் திட்டவட்ட கணிப்பு !!

சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது ..கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது இதுதான் !! அரசியலாளர்கள் திட்டவட்ட கணிப்பு !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2019 12:06 PM GMT


கர்நாடகாவில் இது வரை மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்கள். இவர்களில் 13பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள்.இது போக 2 சுயே ச்சை எம்எல்ஏக்கள் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்கள்.


இதனால் குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் 66 எம்எல்ஏக்கள் மதசார்பற்ற ஜனதா தளத்தின் 34 எம்எல்ஏக்கள் என்று 100எம்எல்ஏ க்களின் ஆதரவுதான் இருக்கிறது.ஆனால் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் 2 சுயேச்சைகள் அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ என்று 108 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது .


ஆனால் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை. இழுத்துக் கொண்டே செல்கிறது. காரணம் என்னவென்றால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை மறுபடியும் சமாதானம் செய்து ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து
ஆட்சிக்கு ஆதரவாக கொண்டு வர குமாரசாமி குரூப் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது.


இந்த முயற்சிக்கு துணையாக குமாரசாமி இன்றும் தொடர்ந்து முதல்வராக இருப்பதால் போலீஸ் துணை புரிந்து வருகிறது. முடிவு என்னாகிறது
என்று விரைவில் தெரிந்து விடும்.ஆட்சியை தக்கவைக்க அவர்கள் போராடும் போராட்டத்தில் பாதியாவது ஆட்சியை கைப்பற்ற பாஜக செய்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
.
ராஜினாமா செய்துள்ள 16 எம்எல்ஏக்களை யும் மீடியாக்கள் முன்னிலையில் பிஜேபி தங்கள் கட்சில் இணைத்து இருக்க வேண்டும்.இல்லை யென்றாலும் மும்பையில் ஹோட்டலில் தங்கி காவல் காத்து வந்த இந்த 10 எம்எல்ஏக்களையும் பாஜகவுடன் இணைத்து இருந்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் தானாகவே அமலுக்கு வந்துவிடும்.
.
இந்த மாதிரி அதிரடியான செயல்களை பாஜக திட்டம் போட்டு செய்யவில்லை, ஏனெனில் இவர்கள் திடீரென்று மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டால் என்ன செய்ய முடியும்?


பாஜகவுக்கு இப்பொழுது தேவை காங்கிரஸ் எம் எல்ஏக்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் அதற்க்காகத்தான் அவர்களை ராஜினாமா செய்து வைத்து வருகிறது பாஜக என கூறப்படுகிறது.


மும்பைக்கு அழைத்து சென்றதற்கு பதிலாக டெல்லிக்கு அழைத்துப்போய் நட்டா முன்னிலையில் அவர்களை பாஜகவில் சேர்த்து இருந்தால் அவர்களின் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்வதற்கு வழி ஏற்பட்டு அவர்களின் எம்எல்ஏ பதவி தானாக போய் விடும் அல்லவா. பாஜகவுக்கு அது தானே தேவை.


ஆனால் இப்பொழுது பாருங்கள். காங்கிரஸ் தன்னுடைய எம்எல்ஏக்களை மீண்டும் கைப்பற்ற கடைசி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. நேற்று தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தியது. நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள வில்லை என்றால் கட்சி தாவல் தடை
சட்டம் மூலமாக எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சித்தராமையா.
.
காமெடியை பாருங்கள் அவர்களே காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள் .அவர்கள் நாளை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை
என்றால் எம்எல்ஏ பதவியை பறித்துவிடுவார்களாம்.இதனால் 6 வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற பயத்தையும் வேறு காங்கிரஸ் எம்எல்ஏ க்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.


Anti deflection law அதாவது கட்சி தாவல் தடை சட்டம் மூலமாக எம்எல்ஏ பதவியை இழப்பவர்களால் நிச்சயமாக உடனடியாக தேர்தலில்போட்டியிட முடியும். ஆனால் ஊழல் வழக்குகளால் தண்டனை பெற்று பதவி பறிக்கப்பட்டவர்களால் தான் 6 வருடத்திற்கு போட்டியிடமுடியாத நிலை ஏற்படும்.


ஆனால் காங்கிரஸ் கர்நாடகாவில் தன்னுடை ய எம்எல்ஏக்களை எப்படியாவது மிரட்டி பணிய வைத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடைசி முயற்சியில் இருக்கிறது.ஆனால் பாஜக உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்து
இருக்கிறது.


நாளை உச்சநீதிமன்ற உத்தரவு பிஜேபிக்கு சாதகமாக வர வாய்ப்புகள் இருக்கிறது. பாஜக செய்ததிலேயே அற்புதமான செயல் எதுவென்றால் அது அந்த 10 எம்எல்ஏக்களையும் உச்சநீதிமன்றம் செல்ல வைத்தது தான். இனி
சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது.


சபாநாயகரின் அலட்சியத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நிச்சயமாக சட்டையை சுழற்றும்.. அதற்குபிறகு குமாரசாமி, சிவகுமார், சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா என்று அனைவரும் கர்நாடக அரசியலில் இருந்து ஓரங்கட்டி வைக்க ப்பட்டு பிஜேபி ஆட்சியை கைப்பற்றும்.. இதுதான் கர்நாடகாவில் அடுத்து நடக்கப்போவது என அடித்து கூறுகிறார்கள் அரசியல் கணிப்பாளர்கள்..


( source: விஜயகுமார் அருணகிரி )


Next Story
கதிர் தொகுப்பு
Trending News