Top
undefined
Begin typing your search above and press return to search.

போட்டோஷாப் செய்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பி வருகின்றனரா தி.மு.க-வினர் ? : மீண்டும் வருத்தெடுத்த ஐ.நா முன்னாள் பொது செயலாளர் #FakeNews

போட்டோஷாப் செய்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பி வருகின்றனரா தி.மு.க-வினர் ? : மீண்டும் வருத்தெடுத்த ஐ.நா முன்னாள் பொது செயலாளர் #FakeNews

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 July 2019 4:15 AM GMT


“நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து, அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிபட்ட தலைவர் மற்ற நாடுகளில் இருந்திருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்”, என்று ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் திரு ஜான் எலியாசன் எழுதியுள்ளதாக உடன் பிறப்புகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.





இந்த பதிவை பார்க்கும் போதே, உடன் பிறப்புகள் பரப்பும் வதந்திகளில் இதுவும் ஒன்று என்பது அனைவருக்கும் எளிதில் புரிந்துவிடும். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்து, அப்படி ஒரு மனிதரை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று கூறியுள்ளார்.







https://twitter.com/JanKEliasson/status/1150297066918305792?s=19


ஸ்டாலின், டி.ஆர் பாலு ஆகியோருடன் ஜான் எலியாசன் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப்பாக இருக்குமோ என்று சற்று தேடிப்பார்த்தால், அது டி.ஆர் பாலு அவர்களின் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிறப்பட்டுள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்



Screenshot from TR Baalu's official website


இந்த புகைப்படம் மீது சந்தேகம் வலுத்த நிலையில், மேலும் ஒரு ட்விட்டர் வாசி, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து, இந்த புகைப்படம் உண்மையா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்து அவ்வாறு ஒரு சந்திப்பு நடந்தவாறு நினைவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.




https://twitter.com/JanKEliasson/status/1150466247089446914?s=19


"இவ்வாறு ஒரு சந்திப்பு நடந்தவாறு நினைவு இல்லை. என்னுடைய அலுவலகம் போன்று இருக்கும் பேக் கிரவுண்ட் உண்மை இல்லை. ஐ.நா வின் குறியீடு, வலது பக்கமே இருக்கும், இடது பக்கம் இருக்காது. புத்தக அலமாரி, இடது பக்கம் தான் இருக்கும்", என்று அடுக்கடுக்கான உண்மைகளை முன் வைத்துள்ளார்.


இந்த நிலையில், டி.ஆர். பாலு அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் போலியானவையா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.


Next Story