Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் பிரதமரின் மகன்.!

ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் பிரதமரின் மகன்.!

ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் பிரதமரின் மகன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2019 2:54 PM GMT


முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் தனது ராஜ்யசபை எம்.பி.பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், டெல்லி பாஜக அலுவலகம் சென்ற அவர் இன்று அக்கட்சியில் இணைந்தார்.


சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் விளங்கிய எஸ்.சந்திரசேகர், 10-11-1990 முதல் 21-6-1991 வரை 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 8-7-2007 அன்று தனது 80-வது வயதில் சந்திரசேகர் காலமானார்.


இதற்கிடையே, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் தந்தையின் வழியில் அரசியலில் ஈடுபட்டு வந்தார். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நீரஜ் சேகர் நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் சென்ற நீரஜ் சேகர் இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பொது செயலாளர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News