Kathir News
Begin typing your search above and press return to search.

வரும் நவம்பர் மாதம் முதல் சபரிமலைக்கு சென்று வர ஹெலிகாப்டர் சேவை !! தினமும் 6 ட்ரிப் போய் வரும் !!

வரும் நவம்பர் மாதம் முதல் சபரிமலைக்கு சென்று வர ஹெலிகாப்டர் சேவை !! தினமும் 6 ட்ரிப் போய் வரும் !!

வரும் நவம்பர் மாதம் முதல் சபரிமலைக்கு சென்று வர ஹெலிகாப்டர் சேவை !! தினமும் 6 ட்ரிப் போய் வரும் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2019 9:49 AM GMT


சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம்.


ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுவஞ்சேரி விமான நிலையம் அருகே உள்ள காலடி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம். இதற்கான பயண நேரம் 35 நிமிடங்கள் ஆகும். இதற்காக காலடியில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து காலடிக்கும் தினமும் 6 முறை ஹெலிகாப்டர் சென்று வரும் வகையில் தேவசம்போர்டு ஏற்பாடு செய்து வருகிறது.


காலை 7 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கும் மாலை 4.15 மணியுடன் ஹெலிகாப்டர் சேவை நிறைவடையும்.


மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம்16-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சேவை நடைபெறும் விதத்தில் திட்ட மிடப்பட்டு உள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய பக்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வது என்பது பற்றி தேவசம் போர்டு இன்னும் முடிவு செய்யவில்லை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News