Top
undefined
Begin typing your search above and press return to search.

அமித்ஷா அதிரடி- சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்துவோம்!

அமித்ஷா அதிரடி- சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்துவோம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 July 2019 12:28 PM GMT



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில், பேசும் போது கூறியதாவது:-


நரேந்திர மோடி அரசு நாடு முழுவதும் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்ஆர்சி) அறிமுகப்படுத்தவும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்தவும் உறுதி பூண்டுள்ளது.


"தற்போது என்.ஆர்.சி அசாம் உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்." மோடி அரசு, இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை உறுதி செய்கிறது.


அத்தகைய குடியேறியவர்கள் அனைவரும் சர்வதேச சட்டத்தின்படி நாடு கடத்தப்படுவார்கள்.


இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்


Next Story