Top
undefined
Begin typing your search above and press return to search.

மூலவர் தரிசனம் ரத்து; அத்திவரதரை மட்டுமே தரிசிக்க அனுமதி! பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு !!

மூலவர் தரிசனம் ரத்து; அத்திவரதரை மட்டுமே தரிசிக்க அனுமதி! பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  19 July 2019 7:20 AM GMT



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் அனந்தசரஸ் எனும் புனித குளத்தினுள் நீருக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தர்சனம் அளிக்கிறார். பக்கதர்களுக்கு அத்திவரதர், 48 நாட்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். இந்த முறை கடந்த 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.


கோவில் உள்ளே வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசம் தரும் அத்திவரதர், முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருகிறார்.


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் தரிசனம் என்பதால் வார நாட்களில் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பக்தர்களும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் சுமார் 2 லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க வருகிறார்கள்.


18 - வது நாளான நேற்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் பெருமாளுக்கு உகந்த நட்சத்திர தினத்தன்று வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க திரண்டனர். கிழக்கு கோபுர வாசலில் கூட்ட நெரிசல் அதிகமானது. கூட்டத்தை முறைபடுத்த போதுமான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்ய தவறிவிட்டது.


இதனால், மாலை சுமார் 4 மணி அளவில் கூட்ட நெரிசல் காரணமாக, பக்தர்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். 2 பேர், அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் வருமானத்தில் மட்டுமே குறியாக உள்ளதாலும், பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறியதாலும், பக்தர்கள் கொதிப்படைந்தனர்.


4 பக்தர்களின் இறப்பிற்கு பிறகு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து நிர்வாகம், நெரிசல் ஏற்படுவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அத்திவரதரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.


இதேபோல் நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய பகுதிகளில் அதிக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்துள்ளனர்.


Next Story