Kathir News
Begin typing your search above and press return to search.

வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது

வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது

வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2019 5:55 AM GMT


வேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் தி.மு.க சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்ற பலருடைய கணிப்புகளையும் பொய்யாக்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


அந்தத் தொகுதியில் அதிமுகவும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.


அ.தி.மு.க கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் களத்தில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த அரசியல் நிலைமை இப்போது வேலூரில் இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வென்றது.


வேலூரில் தி.மு.க எளிதாக வென்றுவிடும் என்று இன்னமும் அந்தக் கட்சியினர் நம்புகிறார்கள் என்றாலும் பலரிடத்திலும் வேறு மாதிரியான எண்ணங்களும் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்தியில் பா.ஜ.க அரசாங்கம் யானை பலத்தில் ஆட்சி நடத்துவதால் தி.மு.க-வுக்கு வாக்களிப்பதில் அர்த்தம் இருக்காது என்றும், நாட்டுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் நதி நீர் இணைப்பு உட்பட பலதிட்டங்களை கொண்டு வருவது குறித்து பா.ஜ.க நம்பகமாக கூறுவதால் அந்த கட்சியை குறிப்பாக மோடியை இந்த முறை ஏமாற்றக் கூடாது என பலர் கருதுவதாகக் கூறப்படுகிறது.


அதேவேளையில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் தொகுதிக்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார் என்று பலரும் கருதுவதாக அரசியல் கவனிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இப்போது வேலூரில் முடிவு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், பொது நிர்வாகத் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் என்பவரும் வேலூர் தொகுதி வாக்காளர்கள் மனதில் இப்போது சிறு மாற்றம் இடம் பெற்று இருப்பதாகக் கணிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் நிலவியதைப்போன்ற எண்ணம் வாக்காளர்களிடம் இப்போது எண்ணம் இல்லை. தி.மு.க-வுக்கு முன்பு இருந்த ஆதரவு இப்போது இருக்காது என்கிறார் அவர். ஏற்கனவே தி.மு.க-வுக்கு சாதகமாக பேசிய பலரும் இப்போது மாற்றி பேசுவதாக கூறியுள்ளது மற்ற பலரின் கருத்துக்களுடன் ஒத்துள்ளது என கூறுகிறார்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News