Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் பதவிக்கு வர ராகுல் காந்தி கனவு கண்டால் மட்டும் போதாது, மோடியைப் போல வல்லமைத் திறன் வேண்டும் !! காங்கிரசை அலற விட்ட ஜி.கே.வாசன்!!

பிரதமர் பதவிக்கு வர ராகுல் காந்தி கனவு கண்டால் மட்டும் போதாது,  மோடியைப் போல வல்லமைத் திறன் வேண்டும்  !! காங்கிரசை அலற விட்ட ஜி.கே.வாசன்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  22 July 2019 9:10 AM GMT



மோடிக்கு மாற்றாக தான் பிரதமராக வர வேண்டும் என கனவு கண்ட வாரிசுகள் எல்லாம் விலாசம் தெரியாமல் சுற்றுகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மறைமுகமாக ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.


திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட வாசன் பேசியதாவது: ''


வாக்கு வங்கியைப் பொருத்தவரை, அதிமுக ஆட்சியைத் தக்க வைத்ததில் தமாகாவின் பங்கு மிக முக்கியமானது'' என்று தெரிவித்தார். மேலும், உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் தரும் காலம் விரைவில் வரும் என்று பேசியவர் திமுக-வையும், காங்கிரசையும் தாக்கவும் தவறவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பிரதமர் கனவோடு இருந்த முன்னாள் தலைவரின் வாரிசுகள் எல்லாம் இன்று விலாசம் தெரியாத அளவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ராகுலை கடுமையாக விமர்சித்தார் வாசன்.
மேலும், 134 வருடப் பாரம்பரிய தேசிய கட்சிக்கு மக்கள் வெறும் 52 இடங்களை மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்றும் பேசினார். மேலும் மிகப்பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியை எடுத்துக் காட்டாகக் கூறி மறைமுகமாக பெருமை படுத்தினார். இதன் மூலம் ராகுல் காந்திக்கு நாட்டை வழி நடத்தும் வல்லமை இல்லை என்பதையும் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.


Next Story