Kathir News
Begin typing your search above and press return to search.

தரிசு நிலத்துக்கும் தரமான திட்டம் வகுத்த பிரதமர் மோடி அரசு - விவசாயிகளுக்கு பணத்தை அள்ளித்தரும் மத்திய அரசின் விவசாய திட்டம்.!

தரிசு நிலத்துக்கும் தரமான திட்டம் வகுத்த பிரதமர் மோடி அரசு - விவசாயிகளுக்கு பணத்தை அள்ளித்தரும் மத்திய அரசின் விவசாய திட்டம்.!

தரிசு நிலத்துக்கும் தரமான திட்டம் வகுத்த பிரதமர் மோடி அரசு - விவசாயிகளுக்கு  பணத்தை அள்ளித்தரும் மத்திய அரசின் விவசாய திட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2019 9:54 AM GMT


விவசாயிகள் இப்போது பயனற்ற நிலையில் வைத்திருக்கும் நிலத்தை அதாவது விளைச்சலுக்கு சரிபடாத
தரிசு நிலம் அல்லது குறைந்த விளைச்சலை அளிக்கும் நிலத்தை பயன்படுத்தி
சம்பாதிக்க மத்திய அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சூரிய ஆற்றலை
பயன்படுத்தி மின்சாரம் உருவாக்குவதற்காக அரசாங்கம் இப்போது அத்தகைய தரிசு
நிலங்களை பயன்படுத்திக் கொள்ளும். இந்த முறை சூரிய வேளாண்மை என்று
அழைக்கப்படுகிறது.


சூரிய
ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக, இதுபோன்ற ஒரு ஏக்கர் நிலப்பரப்பை அரசுக்கு
வழங்கினால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .80,000 வரை சம்பாதிக்க முடியும்.



மேலும்அந்த நிலங்களை, விவசாயிகள் காய்கறிகளையும் சிறு பயிர்களையும்
வளர்ப்பதற்கு சூரிய விவசாய நிலங்களை பயன்படுத்தலாம் என்பதும் தான்
சிறப்பம்சம் ஆகும்.


1 மெகாவாட் சோலார் ஆலை அமைக்க 5 ஏக்கர் நிலம்
தேவை என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த
அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்தகைய ஒரு சூரிய ஆலையை கொண்டு ஆண்டுக்கு
சுமார் 11 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். எனவே, ஒரு ஏக்கரில்
தரிசு நிலத்தை வைத்திருக்கும் ஒரு விவசாயி, 0.2 மெகாவாட் சூரியசக்தியை
உற்பத்தி செய்ய உதவ முடியும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். அத்தகைய ஆலை
மூலம் ஆண்டுதோறும் 2.2 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.


KUSUM Scheme என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் படி, ஒரு விவசாயியின் நிலத்தில் ஒரு சோலார் ஆலையை நிறுவும் டெவலப்பர்கள், விவசாயிக்கு ஒரு யூனிட்டுக்கு 30 பைசா செலுத்துவார்கள், இது மாதத்திற்கு சுமார் 6600 ரூபாய். ஆண்டு அடிப்படையில், இது சுமார் 80,000 ரூபாயாக கிடைக்க வழி செய்கிறது. மேலும், நிலத்தின் உரிமையானது விவசாயிகளிடமே இருப்பதால், அவர் விரும்பினால் அதே நிலத்தில் சிறிய அளவிலான சாகுபடி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டத்தின் மூலம்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்கும் டிஸ்காம் (விநியோக
நிறுவனங்கள்) ஒரு யூனிட்டுக்கு 50 பைசா மதிப்புள்ள மானியம் கிடைக்கும் என
மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, இதுபோன்ற சூரிய பண்ணைகளில் உற்பத்தி
செய்யப்படும் மின்சாரம் விற்கப்படுவதை இது ஊக்குவிக்கும். இத்திட்டம்
விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.


விவசாயிகள் ஒரே
நிலத்தில் ஒரு கொட்டகை கட்டலாம், மேலும் காய்கறிகளையோ அல்லது பிற சிறு
பயிர்களையோ பயிரிடலாம், மேலே ஒரு சோலார் பேனல் இருக்கும். நீர்ப்பாசன
பற்றாக்குறை அல்லது குறைந்த மகசூல் காரணமாக விவசாயத்தை கைவிடுகிற ஏராளமான
விவசாயிகள் இப்போது இந்த சூரிய விவசாய திட்டத்தின் மூலம் தங்கள் நிலங்களை
பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News