Top
undefined
Begin typing your search above and press return to search.

குழந்தைகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்க கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு!!

குழந்தைகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்க கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு!!

KathirBy : Kathir

  |  25 July 2019 12:45 PM GMT



டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்க போக்சோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இதைத் தொடர்ந்து கடந்த 18-ஆம் தேதி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, குழந்தைகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் குழந்தைகள் தொடர்புடைய ஆபாசப் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆபாசப்படங்களை வெளியிடுவோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்டவற்றை விதிக்கும் வகையில் போக்சோ மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


தொடர்ந்து போக்சோ சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


போக்சோ சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


குற்றவாளிகளை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்ணியமான குழந்தை பருவத்துக்காகவும் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க ஏதுவாக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை கொடூரமான முறையில் கற்பழித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படும். அதாவது அவர் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும்.


அதோடு அபராதமோ, மரண தண்டனையோ விதிக்கவும் வழிகாணப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆபாச படங்களில் ஈடுபடுத்தினால் அபராதத்துடன், 5 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அவர் 2-வது முறையும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அபராதத்துடன் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.


இவ்வாறு அந்த சட்டதிருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட போக்சோ சட்ட திருத்த மசோதா, விரைவில் குடியரசுத்தலைவரிடன் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும்.


இந்த நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கு கிறிஸ்தவ மதத்தை துணைக்கு இழுத்து உள்ளனர். இது தொடர்பாக ராஜ்கோட் கத்தோலிக்க பிஷப் சித்தூபரம்பில் கூறும்போது, “நாங்கள் மரண தண்டனையை எதிர்க்கிறோம். எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை கொடுப்பதை நாங்கள் ஏற்கவில்லை” என்றார்.


ஒவ்வொரு ஆண்டும் பாதிரியார்களின் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது என்று போப் வரும் தெரிவிக்கிறார். சர்ச்சில் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகிறது.


ஜாதி, மதம், இனம் கடந்து குழந்தைகளின் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள இந்த போக்சோ சட்ட திருத்த மசோதாவை பாதிரியார்கள் எதிர்பது உள்நோக்கம் கொண்டதாகவே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.


Next Story