Kathir News
Begin typing your search above and press return to search.

எந்த தெய்வத்திற்கு எந்த ஹோமம்?

எந்த தெய்வத்திற்கு எந்த ஹோமம்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2019 11:25 AM GMT


மகா கணபதி ஹோமம்
- தடையின்றி செயல்கள் நடைபெறவும், மகாலட்சுமி அருள்
பெறவும் இந்த ஹோமத்தை
செய்யலாம்.


சந்தான கணபதி
ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் இந்த ஹோமம் செய்திட புத்திர
பாக்கியம் கிட்டும்.


வித்யா கணபதி
ஹோமம் – கல்விக்காக செய்யப்படும்.


மோகன கணபதி ஹோமம்
– திருமணம் தடை நீக்கும்.


ஸ்வர்ண கணபதி
ஹோமம் - வியாபாரத்தில் லாபம் கிடைக்க செய்யப்படும் ஹோமம்.


நவகிரக ஹோமம் -
நவகிரகங்களினால் ஏற்படக் கூடிய பதிப்புகள் விலகவும், நன்மைகள் ஏற்படும் செய்யலாம்.


லட்சுமி குபேர
மகாலட்சுமி ஹோமம் – இந்த ஹோமத்தை செய்வதால், பரம ஏழையும் குபேரனாவான்.


துர்கா ஹோமம் -
எதிரிகளின் தொல்லை அகல


சுதர்சன ஹோமம் - கடன் தொல்லை
நீங்க,பில்லி சூன்யம்
ஏவல்கள் அகல


ஆயுஷ் ஹோமம் - ஆயுள்விருத்தியாகவும்,நோய்களில்
இருந்து நிவாரணம் கிடைக்கவும் செய்யப்படும் ஹோமம்.


மிருத்யுஞ்சய
ஹோமம்- இதுவும் ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணத்திற்கானது


தன்வந்திரி ஹோமம்
- நோய் நிவாரணம் கிடைக்க செய்யக்கூடியது.


ஸ்வயம்வரா
ஹோமம்-திருமணதடை அகன்று விரைவில் திருமணம் கைகூட


சந்தான கோபால
கிருஷ்ணஹோமம் - குழந்தை பேறு கிடைக்க


மேதா
தட்ஷிணாமூர்த்தி ஹோமம் – உயர்கல்வி கிடைக்க
வேண்டுவோர் இந்த ஹோமத்தினை செய்யலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News