Top
undefined
Begin typing your search above and press return to search.

5 ஆண்டுகால மோடி ஆட்சியில் வன்முறைகளை கைவிட்டு ஓட்டம் பிடித்த நக்சலைட்டுகள் !! வன்முறைகள் 43 சதவீதமாக குறைந்தது!!

5 ஆண்டுகால மோடி ஆட்சியில் வன்முறைகளை கைவிட்டு ஓட்டம்  பிடித்த நக்சலைட்டுகள் !!  வன்முறைகள் 43 சதவீதமாக குறைந்தது!!

KathirBy : Kathir

  |  27 July 2019 4:55 AM GMT



கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் பன்முக நடவடிக்கைகளால் நக்சல் வன்முறை 43 சதவீதம் குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார்.


முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நக்சல் வாதத்தை ஒழிக்க ராணுவ துணை படைகளை மட்டுமே நம்பி இருந்தது. இது எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. மாறாக நக்சல்பாரிகளின் தாக்குதலால் அதிக அளவு படை வீரர்களே உயிர் இழந்தனர்.


இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் நக்சல்வாதத்தை ஒழிக்க புதிய அணுகுமுறைகளை கையாண்டது. அதன்படி ரூ.1௦௦௦, 500 நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பின் நக்சல்பாரிகளுக்கு செல்லும் பணம், ஆயுதங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்பட்டதால் இவர்களின் செயல் பாடுகள் படிப்படியாக ஒழிந்து வருகின்றன . மேலும் படை வீரர்கள் நூதன கருவிகளுடன் உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் நக்சல்பாரிகளை வேட்டையாடத் தொடங்கினர். மேலும் சரணடையும் நக்சல்பாரிகளுக்கும் மறு வாழ்வு அளிக்கப்படுகிறது.


இதனால் நக்சல்வாதம் மற்றும் அதன் வன்முறைகள் கடந்த 5 ஆண்டுகளில் 43 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மேலும் இடதுசாரிகளின் தீவிரவாத புவியியல் பரப்பு படிப்படியாக குறைந்து சென்ற ஆண்டு 60 மாவட்டங்கள் மட்டுமே நக்சல் வன்முறை சம்பவங்களை சந்தித்துள்ளதாகவும் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் கூறினார்.


Next Story