Top
undefined
Begin typing your search above and press return to search.

ரெயில் கட்டணம் உயராது : பியூஷ் கோயல் அறிவிப்பு!!

ரெயில் கட்டணம் உயராது : பியூஷ் கோயல் அறிவிப்பு!!

KathirBy : Kathir

  |  27 July 2019 6:48 AM GMT



பாராளுமன்ற மேல் சபையில் கேள்விநேரத்தின்போது, ரெயில் கட்டணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


டீசலுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டதால் டீசல் விலையும் அதிகரித்துள்ளது. டீசல் விலை அதிகரித்துள்ளதால், ரயில் கட்டணங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.


வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களும் மின்சாரத்தில் இயங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 650 கி.மீ ரயில் பாதைகள் மட்டுமே மின்சாரமயமாக்கப்பட்டன. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் 2017-18 ஆம் ஆண்டில் 4,000 கிலோ மீட்டர் ரயில் பாதைகளும், அதற்கடுத்த ஆண்டில் 5200 கிலோ மீட்டர் ரயில் பாதைகளும் மின்சாரமயமாக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் எங்களது இலக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்.


விரைவில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்சாரமயமாக்கப்படவுள்ளன. இதன் மூலம் டீசல் பயன்பாடு குறையும். சில ரயில் பாதைகளில் மின்சாரம் மூலம் ரயில்களை இயக்க முடியாது. அத்தகைய பாதைகளில் பயோ-டீசல் எரிபொருள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ரயில்வேக்கு சொந்தமாக உள்ள காலி இடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்காக, சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் குறையும். ரயில்வேக்கு தேவையான மின்சாரத்தையும் தயாரித்து கொள்ளலாம்.


அரசு மேற்கொள்ளும் இத்தகைய திட்டங்களினால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் உலகிலேயே முதல் பசுமை ரயில்வேத் துறையைக் கொண்ட நாடு என்ற பெருமையை நாம் பெறுவோம்.


இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.


Next Story