Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டாஸ் படத்தில் தற்காப்புக்கலை கேரக்டரில் நடிக்கும் தனுஷ்!!

பட்டாஸ் படத்தில் தற்காப்புக்கலை கேரக்டரில் நடிக்கும் தனுஷ்!!

பட்டாஸ் படத்தில் தற்காப்புக்கலை கேரக்டரில் நடிக்கும் தனுஷ்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2019 8:02 AM GMT


தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று 'பட்டாஸ்' என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது


இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ளதாகவும் இந்த படம் ஒரு தற்காப்புக்கலை குறித்த கதையம்சம் கொண்டது என்றும் அப்பா தனுஷ் தற்காப்புக் கலை பயின்ற ஒரு கேரக்டர் என்றும், மகன் கேரக்டர் பெயர்தான் பட்டாஸ் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது


இந்த படத்திற்காக தனுஷ் தற்காப்புக் கலை குறித்த பயிற்சியில் 15 முதல் 20 நாட்கள் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. தற்காப்பு கலைகளில் ஒன்றான 'களறி'க்கு முன்னரே சோழர்கள் பயன்படுத்தி வந்த ஒரு தற்காப்பு கலை குறித்த படம் தான் இந்த படத்தின் ஒரு கதை என்றும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News