Top
undefined
Begin typing your search above and press return to search.

அடுத்த தலைமுறை இராணுவத்திற்கான அடித்தளம் : ராணுவப் பள்ளி தொடங்குகிறது ஆர்.எஸ்.எஸ் - 82 ஆண்டுகால வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி.!

அடுத்த தலைமுறை  இராணுவத்திற்கான அடித்தளம் : ராணுவப் பள்ளி தொடங்குகிறது ஆர்.எஸ்.எஸ் - 82 ஆண்டுகால  வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி.!

KathirBy : Kathir

  |  29 July 2019 9:59 AM GMT


உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ராணுவ பள்ளி வரும் கல்வியாண்டு முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 6-ம் வகுப்பில் 160 மாணவர்களுடன் இப்பள்ளி இயங்க உள்ளது.


சீரிய முயற்சியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள்:


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கல்விபிரிவு வித்யா பார்தி. இந்த அமைப்பு முதல் முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளியை தொடங்கி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜூ பையா நினைவாக ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என்ற பெயரில் இப்பள்ளி தொடங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உண்டு உறைவிட பள்ளியாக இது செயல்படும். நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆர்‌.எஸ்.‌எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர்புகளில் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ராணுவக் கல்வி மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட இருக்கின்றன.


ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு:


ராணுவ வீரர்களின் குழந்தைகள் 56 பேர் இடஒதுக்கீடு அடிப்படையில் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ராணுவ கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். 1937-ம் ஆண்டே ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இத்தகைய பள்ளிகளை நடத்தினார். இந்தப் பள்ளிக்காக உத்தர பிரதேச மாநிலம் ஷிகார்பூரில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 அடுக்கு கட்டிடம் தயாராகி வருகிறது. இந்தப் பள்ளிக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் இராணுவப் பள்ளிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த தலைமுறை இராணுவத்திற்கான அடித்தளம்:


ராணுவம், கப்பற்படை, விமானப் படை ஆகியவற்றில் பற்றாக்குறை இருப்பதாகவும், அதற்குக் காரணம் இளம் தலைமுறையினர் பலர் தகுதியானவர்களாக இல்லாததே காரணம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அதற்கான தீர்வாக இந்த ராணுவப் பள்ளி இருக்கும் எனவும் சிறப்பான ராணுவ வீரர்களை உருவாக்குவதுதான் இப்பள்ளியின் நோக்கம் என்றும் இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story