Top
undefined
Begin typing your search above and press return to search.

“Man vs Wild” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி! இதுவரை பார்த்திராத மோடியின் சாகசப் பயணம்!! டிரைலர் வைரலானது!!

“Man vs Wild” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி! இதுவரை பார்த்திராத மோடியின் சாகசப் பயணம்!! டிரைலர் வைரலானது!!

KathirBy : Kathir

  |  29 July 2019 7:34 AM GMT



உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.





டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், இதுவரை யாரும் செல்லாத காடுகள், பார்க்காத இடங்களுக்கு செல்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.
Man vs Wild என்ற இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இதற்கான டிரெய்லரை பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 




https://twitter.com/beargrylls/status/1155714307872579585?s=21



அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த டிரெய்லரை வெளியிட்ட சில நிமிடங்களில் வைரலானது. இப்போது அதிகமானோர் பார்க்கும் டிரெய்லராக வலகம் வருகிறது.





இந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி, அடர்ந்த காட்டிற்குள் நடந்து செல்வது, காட்டிலிலுள்ள ஆற்றில் பயணம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்சி, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story