Top
undefined
Begin typing your search above and press return to search.

புலிகள் வசிக்க மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி: சத்திய மங்கலத்துக்கு பிரதமர் மோடி விருது..!

புலிகள் வசிக்க மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி: சத்திய மங்கலத்துக்கு பிரதமர் மோடி விருது..!

KathirBy : Kathir

  |  30 July 2019 2:05 PM GMT


புலிகள் வசிப்பதற்கு ஏற்ற மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி என்ற பெருமையை ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி பெற்றுள்ளது. இதற்கான விருதை பிரதமர் மோடி வழங்கினார்.


உலகின் அரியவகை இனமாக மாறி வரும் புலிகளைக் காப்பாற்றினால்தான், வனங்களை பாதுகாக்க முடியும். வனச்சூழல், உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்த, புலிகளைக் காப்பது அவசியமாகியுள்ளது.


இதற்காக ஆண்டுதோறும், ஜூலை 29, சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி டெல்லியில் வெளியிட்ட போது இந்த விருதை வழங்கினார்.


Next Story