Top
undefined
Begin typing your search above and press return to search.

“எமர்ஜென்சியின்போது நடந்த ஜனநாயகப் படுகொலையை மறந்துவிட்டீர்களா?” - ப.சிதம்பரத்தை காச்சி எடுத்த அமித்ஷா!!

“எமர்ஜென்சியின்போது நடந்த ஜனநாயகப் படுகொலையை மறந்துவிட்டீர்களா?” - ப.சிதம்பரத்தை காச்சி எடுத்த அமித்ஷா!!

KathirBy : Kathir

  |  2 Aug 2019 12:16 PM GMT



எமர்ஜென்சி காலகட்டத்தில் 19 மாதங்களாக தொடர்ந்த நடந்த ஜனநாயகப் படுகொலையை ப.சிதம்பரம் நினைத்து பார்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி அளித்தார்.


சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடைபெற்றது. அப்போது, ஜனநாயகத்துக்கு எதிரான மக்கள் விரோத சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.


இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துப் பேசியதாவது:-


ஏற்கனவே ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதைச் சேர்ந்த தனிநபரை ஏன் பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு அமைப்பு தடை செய்யப்பட்ட உடன் அதைச் சேர்ந்த நபர்கள் மற்றொரு அமைப்பை உருவாக்கி செயல்படுகிறார்கள். இவ்வாறு எத்தனை அமைப்புகளை தடை செய்துகொண்டிருப்பது?


எமர்ஜென்சியின்போது என்ன நடந்தது என்று அனைவரும் அறிந்ததுதான். அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. எதிர் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் 19 மாதங்களாக ஜனநாயகப் படுகொலை நடைபெற்றது. இதை ப.சிதம்பரம் சற்று நினைத்து பார்க்க வேண்டும். பா.ஜ.க. சட்டத்தை தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவது ஏற்புடையதா?


காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். இது இயற்கையானதுதான். ஏனென்றால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் விரக்தி அவரிடம் எதிரொலிக்கிறது. என்.ஐ.ஏ பதிவு செய்த 3 வழக்குகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், இச்சட்டம் முன்பு அரசியல் வெறுப்புணர்வு காரணமாக பயன்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பயங்கரவாதிகளாக ஒப்பிட்டு பழிவாங்கப்பட்டனர்.


2004, 2008, 2013 என கடந்த காலங்களில் அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு அளித்தது. ஏனென்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. பயங்கரவாதம் மனித குலத்துக்கே எதிரானது. குறிப்பிட்ட அரசுக்கோ அல்லது தனிநபருக்கோ அல்ல.


இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Next Story