Top
undefined
Begin typing your search above and press return to search.

முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை வாங்க குவியும் மக்கள் - இந்தியாவின் கட்டுக்குள் வரும் காஷ்மீர் : பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் துணிச்சலான நடவடிக்கை.!

முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை வாங்க குவியும் மக்கள் - இந்தியாவின் கட்டுக்குள் வரும் காஷ்மீர் : பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் துணிச்சலான நடவடிக்கை.!

KathirBy : Kathir

  |  3 Aug 2019 5:20 AM GMT


காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் விரைந்து வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஏற்கனவே கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 25,000 பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், மாநில உள்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் தங்களது பயணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு விரைந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


பாகிஸ்தான் சதிவேலை:


அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.


மேலும் உங்களுக்கு கண்ணிவெடி புகைப்படத்தைக் காட்டுகிறேம். அதில் பாகிஸ்தான் ராணுவத் தொழிற்சாலை குறியீடு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம்தான் காரணம் என அது சொல்கிறது. இதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது.


இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க காஷ்மீர் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


விமானப் போக்குவரத்து இயக்குநரகம்:


ஸ்ரீநகரிலிருந்து தேவைப்பட்டால் கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஸ்ரீநகருக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்வது அல்லது மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளுபடி செய்துள்ளன.


Next Story