Top
undefined
Begin typing your search above and press return to search.

“கஜினி, கோரி என்று ஏவுகணைக்குகூட ஆக்கிரமிப்பாளன் பெயர்தான்” – பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்!!

“கஜினி, கோரி என்று ஏவுகணைக்குகூட ஆக்கிரமிப்பாளன் பெயர்தான்” – பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்!!

KathirBy : Kathir

  |  4 Aug 2019 7:46 AM GMT


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலுந்துகொண்டுபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


பயங்கரவாதம் போன்ற விஷயங்களில் நாம் வெற்றி கண்டுள்ளோம்பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதுபயங்கரவாதம்தான். இதை உலகம் புரிந்து கொண்டுள்ளது.


பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலகிற்கு நாம் எடுத்து கூறி உள்ளோம். அதன்விளைவு தான் பல காலமாக பயங்கரவாதத்திற்கு மறைமுகமாக உதவி செய்தவர்கள் (பாகிஸ்தான்) தற்போது அமைதி மற்றும்ஜனநாயக வழியில் இணைந்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க முடியாது.


ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பாபர், கோரி எனஏவுகணைகளுக்கு பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது. ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் எந்த நாட்டையும் தாக்குவதில்லை. அனைத்துவிதத்திலும் இந்திய ராணுவம் அமைதி மற்றும் நிலைத்தன்மையையே கடைப்பிடிக்கிறது. அமைதி, சமநிலையை வெளிப்படுத்தும்வகையில் இந்தியா ஏவுகணைகளுக்கு ஆகாஷ், அக்னி, பிரம்மோஸ், திரிசூல் என பெயரிட்டுள்ளது.


இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.


Next Story