Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் நடவடிக்கைக்கு கை மேல் பலன் - இனி காஷ்மீரில் பழங்குடியினத்தவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

காஷ்மீர் நடவடிக்கைக்கு கை மேல் பலன் - இனி காஷ்மீரில் பழங்குடியினத்தவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

KathirBy : Kathir

  |  6 Aug 2019 4:26 AM GMT


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை வரவேற்று தலைவர்கள் பலர் மத்திய பாஜக அரசை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையில் முக்கிய பயன்களில் ஒன்றாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இனி சலுகைகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள்வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது; சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சலுகைகளை பெறமுடியும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இத்தனை ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலை வாய்ப்பு மிகக் குறைவு. அங்கு வாழும் மக்கள் பலர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவே இருந்தார்கள். பலர் குடிசைத் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கல்வி புகட்டி, இட ஒதுக்கீடு, மானியம், சிறப்பு சலுகைகள் வழங்கி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் உள்ளதுபோலவே முன்னேற்ற இனி மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என பாஜகவினர் கூறுகின்றனர்.


இதனால் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.




https://twitter.com/ANI/status/1158321315415281665

Next Story