Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவிற்கே சொந்தம் - அதிரடி காட்டும் அமித் ஷா : மூக்குடைப்பு பதிலடி!

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவிற்கே  சொந்தம் - அதிரடி காட்டும் அமித் ஷா : மூக்குடைப்பு பதிலடி!

KathirBy : Kathir

  |  6 Aug 2019 8:15 AM GMT


காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தனது உயிரையும் கொடுக்கத் தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக குறிப்பிட்டார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.


விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, யாருடையை அனுமதியுடன் காஷ்மீரை இரண்டாக பிரிக்கிறீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட அமித் ஷா, அப்படி என்றால் காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க ஐ.நா.வை அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் அவசரகதியில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். இதற்கு பதில் அளித்த அமித் ஷா, அரசியல் காரணங்களுக்காக காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை என்றார்.


காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் தொடர்புடைய விஷயங்களில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று கூறிய அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவிற்கு சொந்தமானது என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பபெற மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட அமித் ஷா, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண தனது உயிரையும் கொடுக்க தயார் என்றார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்து தான் என்றும் அமித்ஷா கூறினார்.


Next Story