Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் உளவுத்துறையின் கழுத்தை இறுக்கி பிடித்த இந்தியா - இன்னும் சில நாட்களில் அரங்கேற இருந்த மாபெரும் தாக்குதல் திட்டம் : வெளியான திடுக்கிடும் தகவல்.!

பாகிஸ்தான் உளவுத்துறையின் கழுத்தை இறுக்கி பிடித்த இந்தியா - இன்னும் சில நாட்களில் அரங்கேற இருந்த மாபெரும் தாக்குதல் திட்டம் : வெளியான திடுக்கிடும் தகவல்.!

பாகிஸ்தான் உளவுத்துறையின் கழுத்தை இறுக்கி பிடித்த இந்தியா - இன்னும் சில நாட்களில் அரங்கேற இருந்த மாபெரும் தாக்குதல் திட்டம் : வெளியான திடுக்கிடும் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Aug 2019 9:02 AM GMT


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது.இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் கொண்டு வரப்பட்டுள்ளது.


தந்திர வேலையில் இறங்கிய பாகிஸ்தான்:


இந்த நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறை மூத்த அதிகாரிகள், தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சுமார் 300 தீவிரவாதிகளில் சிலரை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.


இதற்கிடையே இந்தியாவுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்வதாக சர்வதேச உளவு அமைப்புகள் தகவல் கொடுத்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் டெல்லி மற்றும் மும்பை நகரில் தற்கொலை தாக்குதல்களை நடத்த இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்பு இந்த தாக்குதல்களை அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.


பாதுகாப்பு அதிகரிப்பு:


இதற்கிடையே சில விமான நிலையங்களையும் தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, நாக்பூர், சண்டிகர் ஆகிய 7 விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது. கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் 2 தடவை இந்த உஷார் எச்சரிக்கை அறிவிப்பை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டது.


விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு :


இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் ஒவ்வொருவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான பயணிகள் அனைவரையும் முழுமையாக சோதித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஆகஸ்டு 15-ந்தேதி வரை இந்த சோதனை தீவிரமாக நடைபெறும். எனவே பயணிகள் விமான நிலையத்துக்கு முன் கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News