Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்துக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் !! மத்திய அரசு ஒதுக்கீடு!!

தமிழகத்துக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் !! மத்திய அரசு ஒதுக்கீடு!!

SaravanaBy : Saravana

  |  9 Aug 2019 8:53 AM GMT


நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புகை இல்ல போக்குவரத்தை அதிகப்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


முதற்கட்டமாக இதை போக்குவரத்து துறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு எலக்ட்ரிக் பஸ் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் ‘எலக்ட்ரிக் பஸ்களின்’ சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வந்தது.
இதன்படி மாநில அரசுகளிடம் இருந்து 14,988 பஸ்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5595 எலக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்த அனுமதித்துள்ளது.
இதில் தமிழகத்துக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பஸ்கள், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பஸ்களும் அனுப்பப்படுகிறது. டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 100 பஸ்கள் கொடுக்கப்படுகிறது. இது தவிர பெருநகரங்களில் பஸ்களை இயக்கும் வகையில் 400 பஸ்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 பஸ்களும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு 50 பஸ்களும், தஞ்சாவூருக்கு 25பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


Next Story