Top
undefined
Begin typing your search above and press return to search.

திரையரங்குகளை தெறிக்க விடும் நேர் கொண்ட பார்வை! வசூலில் தல செய்த சாதனை !

திரையரங்குகளை தெறிக்க விடும் நேர் கொண்ட பார்வை! வசூலில் தல செய்த சாதனை !

SaravanaBy : Saravana

  |  11 Aug 2019 5:26 AM GMT


ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர் கொண்ட பார்வை இப்படத்தில் நடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டில்லி கணேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள்நடித்திருக்கிறார்கள் . இப்படத்தை போனிக் கபூர் தயாரித்துள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத்.


இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படம் வருவதற்கு முன் தல ரசிகர்களிடம் மாஸ் இருக்கமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. படம் வெளிவந்த பிறகு அஜித்தின் நடிப்பை பற்றி வானளவு பேசி வருகிறார்கள் தல ரசிகர்கள் . இந்த படமானது மிக பெரிய வெற்றியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதற்கு கரணம்.பட குழுவினர் இயக்கம் நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்துள்ளனர்


சென்னையில் மட்டும் அந்தப் படம், முதல் நாளில் மட்டும் 1.58 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது 2019 -ல் வெளியான படங்களிலேயே வசூலில், முதல் நாளில் அதிக சாதனை படைத்திருக்கும் படம் நேர் கொண்ட பார்வை தான் என திரையுலகினர் கூறுகின்றனர்.


தமிழகம் முழுவதும் இரண்டு நாளில் இப்படம் ரூ.30 கோடி வசூலித்திருப்பதாக இப்படத்தை வெளியிட்ட தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்திருக்கிறார்.


தமிழக சினிமாவில் தல தான் ஓபனிங் கிங் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்


Next Story