Top
undefined
Begin typing your search above and press return to search.

அருண்ஜெட்லிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!! குடியரசுத்தலைவர் மருத்துவமனை விரைந்தார்!!

அருண்ஜெட்லிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!! குடியரசுத்தலைவர் மருத்துவமனை விரைந்தார்!!

By : Ramesh Shivaa

  |  16 Aug 2019 11:01 AM GMT

உடல்நிலை பாதிப்பு காரணமாக ஏற்கனவே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பிய முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி கடந்த 9ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பிரதமர் மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷா
பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் அருண் ஜெட்லிஇன்று ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவக்  குழுவினரிடம் விசாரித்தார். அருண் ஜெட்லி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story