Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக்கம் அணி!!

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக்கம் அணி!!

இரண்டாவது முறையாக  சாம்பியன் பட்டத்தை  வென்றது  சேப்பாக்கம் அணி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 9:11 AM GMT

சேப்பாக்கம் அணி பைனலில், 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி, தொடர்ந்து 2வது முறையாக பைனலில் வீழ்ந்தது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடருக்கான 4வது சீசன் நடந்தது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் கவுசிக் காந்தி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
‘டாப்–ஆர்டர்’ ஏமாற்றம்: சேப்பாக்கம் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெகன்நாதன் கவுசிக் வீசிய முதல் ஓவரின், 3வது பந்தில் ஹரி கோபிநாத் (0) அவுட்டானார். ராமலிங்கம் ரோகித் ‘வேகத்தில்’ கங்கா ஸ்ரீதர் ராஜு (4) வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய கவுசிக் பந்தில் விஜய் சங்கர் (1) சரணடைந்தார். ஜெகன்நாதன் கவுசிக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கவுசிக் காந்தி, ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன் பந்தில் தலா ஒரு பவுண்டரி விளாசினார். இவர், 24 பந்தில், 22 ரன் எடுத்து, மோகன் அபினவ் ‘சுழலில்’ சிக்கினார்.
சசிதேவ் ஆறுதல்: ஜெகதீசன் கவுசிக், சிலம்பரசன், பிரனேஷ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த சுஷில் (21), மோகன் அபினவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முருகன் அஷ்வின், பிரனேஷ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். மோகன் அபினவ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சசிதேவ், முகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து அசத்திய சசிதேவ், பிரனேஷ், ராமலிங்கம் ரோகித் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஆறாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது சசிதேவ் (44 ரன், 33 பந்து, 3 சிக்சர், ஒரு பவுண்டரி) ‘ரன்–அவுட்’ ஆனார். ஹரிஷ் குமார் (1), சித்தார்த் (0) ‘ரன்–அவுட்’ ஆகினர்.
சேப்பாக்கம் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. முருகன் அஷ்வின் (28) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் ஜெகன்நாதன் கவுசிக், மோகன் அபினவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் நாராயணன் ஜெகதீசன் (0), சதுர்வேத் (0), ஹரி நிதிஷ் (4) ஏமாற்றினர். மோகன் அபினவ் (21), விவேக் (23) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய சுமந்த் ஜெயின் (46) நம்பிக்கை தந்தார். திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. பெரியசாமி வீசிய 20வது ஓவரில், முகமது (15), ரோகித் (2), கவுசிக் (0) அவுட்டாகினர். இந்த ஓவரில், 2 ரன் மட்டுமே கிடைத்தது.
திண்டுக்கல் அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சிலம்பரசன் (1), பிரனேஷ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் சார்பில் பெரியசாமி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாவது முறையாக (2017, 2019) சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக்கம் அணிக்கு, கோப்பையுடன் ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது. திண்டுக்கல் அணிக்கு ரூ. 60 லட்சம் கிடைத்தது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News