Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் பிரச்னை முடிந்துவிட்டது அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான்!மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

காஷ்மீர் பிரச்னை முடிந்துவிட்டது அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான்!மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

By : Ramesh Shivaa

  |  19 Aug 2019 2:05 AM GMT

ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு, பாகிஸ்தான் மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சர்வதேச அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்னையை ஐ.நாவிடம் எடுத்துச் சென்றது
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் மற்றும் சீனா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, மூக்குடைபட்டன. இதைத் தொடர்ந்து, எந்த விளைவுகளை சந்திக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம், பூச்சாண்டி காட்டியது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதே, இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்திலும் அது தொடருமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் கூறியதாவது : பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமானால், முதலில் பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவை, அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் உடனான பேச்சுகள் இனி, ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி, எங்களுடைய பேச்சு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி வருவதால், அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசுவோம் என, ராஜ்நாத் சிங் கூறினார்.
Next Story