Top
undefined
Begin typing your search above and press return to search.

75 வயது ஆனதால் பதவியை தூக்கி எறிந்த பா.ஜ.க. அமைச்சர்! கட்சி கொள்கைப்படி விலகினார்!!

75 வயது ஆனதால் பதவியை தூக்கி எறிந்த பா.ஜ.க. அமைச்சர்! கட்சி கொள்கைப்படி விலகினார்!!

By : Ramesh Shivaa

  |  20 Aug 2019 12:58 PM GMT



உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால். பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர் பரேலி தொகுதியில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2003-ஆம் முதல் 2007-ஆம் ஆண்டு வரை அவர் துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். இந்த நிலையில் 75 வயதுக்கு பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசு பொறுப்புகளை வகிக்க வேண்டாம் என பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது.





கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் 75 வயதுக்கு பிறகு பதவி விலகியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இதே காரணத்தை காட்டி போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே கட்சி முடிவை ஏற்று அமைச்சர் ராஜேஷ் அகர்வாலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கு 75 வயது ஆகி விட்டதால், கட்சியின் கொள்கைப்படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதனை ஏற்பது கட்சியின் முடிவு’’ என்று கூறினார்.


Next Story