Top
undefined
Begin typing your search above and press return to search.

விங் கமாண்டர் அபினந்தனை சிறைப்பிடித்து சித்ரவதை செய்த பாகிஸ்தானிய கமாண்டோவை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

விங் கமாண்டர் அபினந்தனை சிறைப்பிடித்து சித்ரவதை செய்த பாகிஸ்தானிய கமாண்டோவை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Aug 2019 7:04 PM GMT


கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை நடத்திய ஒரு தாக்குதலின் போது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை சிறைபிடித்த பாகிஸ்தான் கமாண்டோ ஒருவர், அவரை சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, எல்லை பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், அந்த பாகிஸ்தான் கமாண்டோ கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்து மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு குழு ஒன்றின் துணைத் தலைவரான அகமது கான், இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.




https://twitter.com/TimesNow/status/1163809157071327238?s=19


பிப்ரவரி 27 அன்று அபிநந்தன் சிறைபிடிக்க பட்டபோது பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்களில், அகமது கான் அபினந்தனுக்கு பின்னால் காணப்பட்டார். பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஜெட் ஒன்றைத் துரத்திச் சென்றபோது தனது மிக் 21 ஐ பாகிஸ்தான் படைகள் சுட்டு வீழ்த்திய பின்னர் அபினந்தன் சிறை பிடிக்கப்பட்டார்.




https://twitter.com/gulf_news/status/1163810490935414790?s=19


காஷ்மீரில் பயங்கரவாதத்தை உயிரோடு வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளுக்கு அகமது கான் ஆதரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.


Next Story