Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெண் சிங்கம் ஜெயலலிதா!! பயந்து ஓடிய கருணாநிதியும்.. கண்டனூர் சிதம்பரமும் !!

சட்டத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெண் சிங்கம் ஜெயலலிதா!! பயந்து ஓடிய கருணாநிதியும்.. கண்டனூர் சிதம்பரமும் !!

சட்டத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெண் சிங்கம் ஜெயலலிதா!! பயந்து ஓடிய கருணாநிதியும்.. கண்டனூர் சிதம்பரமும் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 9:52 AM GMT


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கைது வாரண்டுக்குப் பயந்து சிபிஐ அதிகாரிகளுக்கு 27 மணி நேரத்துக்கும் மேல் தண்ணி காட்டுவிட்டு, அங்கே இங்கே ஓடி, அவர்களை பாவம் சுவரேறியெல்லாம் குதிக்க வைத்து கைதாகியிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எவ்வளவு கூலாக எதிர்கொண்டார் என்பதை இந்த துக்ளக் வாசகர் குழுவின் இந்த முகநூல் பதிவு எடுத்துரைக்கிறது. இதோ அந்தப்பதிவு...


ஓடிஒளிபவனுக்கும் கைது செய்யவரும் போது ஐய்யோ கொல்றாங்கப்பான்னு டப்பிங் கொடுத்தவனுக்கும் வக்காளத்து" வாங்குபவர்களின் கவனத்திற்கு:


ஒரு முன்னாள் முதல்வரை கைது செய்யப்போகிறோம் என்று சற்றே பயத்தோடும், பதற்றத்தோடும் தான்
அந்த அதிகாலைப் பொழுதில் போயஸ்கார்டனில் அடியெடுத்து வைத்தார் காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி


அரெஸ்ட் வாரண்ட்டை வாங்கிப்பார்த்த ஜெ,’can you give me 10 minutes pls ’என்று அனுமதி கேட்க அப்படியே ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார் அந்த பெண் போலிஸ் அதிகாரி


இதற்கிடையே கார்டன் பணிப்பெண் காபி எடுத்துக்கொண்டு வர என்ன இது எனக்கா என்று இன்ஸ்பெக்டர் திகைக்க....'ஆமாம் அம்மா கொடுக்கச் சொன்னார்கள்' என்றார்


பத்து நிமிடம் அனுமதி கேட்ட ஜெ,பட பட வென்று தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு இரண்டு சூட்கேஸ் நிறைய தனக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு போயஸ்கார்டனில் தயாராக நின்ற தமிழக காவல்துறையின் ஜிப்சி காரில் ஏறி "போகலாம்" என்று புறப்பட்டார் ஜெயிலுக்கு ஜெ. பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வழக்குகளை எவ்வளவு நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ள வேண்டுமென்பதில்... அவர் ஒரு ஒரு சேலை கட்டிய சிங்கம்.





வேட்டி கட்டிய அசிங்கங்களைப் போல ஜெ...ஓடவில்லை ஓடி ஔியவில்லை ஒப்பாரி வைக்கவில்லை...காலமெல்லாம் போராடியும் உயிருடன் இருக்கும் வரை ஜெ யை நீதிமன்றங்களிலும் வெல்ல முடியாதவர்கள் தான்"கருணாநிதியும் கண்டனூர் சிதம்பரமும்" இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News