Kathir News
Begin typing your search above and press return to search.

மழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள்! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

மழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள்! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

மழையை காரணம் காட்டி வெங்காயத்தை பதுக்க முயலும் வியாபாரிகள்! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 12:55 PM GMT



வெங்காயம் விலை நிர்ணயம் மற்றும் சப்ளையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும், அங்கம் வகித்த சில கட்சிகளும் வெளிப்படையின்றி வர்த்தகர்களுக்கு சாதகமாகவும், தங்கள் மாநிலத்துக்கு மட்டுமே சாதகமாகவும் அரசியல் செய்து வந்தன. இதனால் வெங்காயம் விலை நாடு முழுவதும் தாறு மாறாக விற்றன. பண்டிகை காலங்களில் கிலோ. ரூ.200 வரை கூட விற்றன.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு வியாபாரிகள், வர்த்தகர்கள், நுகர்வோர் பாதிக்காத வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை கண்காணித்து வருவதால் வெங்காயம் நிலை ஸ்திரமான விலையில் விற்று வருகிறது.


இந்த நிலையில் வடமாநிலங்களில் பெய்து வரும் மழைக் காரணம் காட்டி வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்க வர்த்தகர்கள் முயல்வதாக தகவல் வந்த நிலையில் வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.


வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்தும் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News