Top
undefined
Begin typing your search above and press return to search.

திங்கள் கிழமைவரை கஸ்டடிதான் ! சிதம்பரத்தின் கைது தவிர்ப்பு முயற்சி தோல்வி !! நீதிமன்றம் அறிவிப்பு!!

திங்கள் கிழமைவரை கஸ்டடிதான் ! சிதம்பரத்தின் கைது தவிர்ப்பு முயற்சி தோல்வி !! நீதிமன்றம் அறிவிப்பு!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Aug 2019 10:09 AM GMT


கைதை தவிர்ப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமைக்கு (ஆக.,26) ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் ரத்து செய்ததை எடுத்து, அவர் சிபிஐ.,யால் நேற்று முன்தினம் (ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அயோத்தி வழக்கு விசாரணை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதால் இந்த மேல்முறையீட்டு மனு செல்லாது என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் ஏற்கனவே ஆக., 26 வரை 5 நாட்களுக்கு காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது. சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட காவல் ஆக.,26 உடன் முடிவடைவதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆக., 26 க்கு ஒத்திவைத்தது.
சிபிஐ கைது செய்வதை தடுக்க சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ள நிலையில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில், ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. என்றாலும், சி.பி.ஐ வழக்கில் அவர் திங்கள்கிழமை வரை கஸ்டடியில் இருந்து தப்பிக்க முடியாது.


Next Story