Top
undefined
Begin typing your search above and press return to search.

சிக்கப்போகும் அடுத்தடுத்த வி.ஐ.பி க்கள் யார் ? யார் ? பா.ஜ.க பொது செயலாளர் வானதி சீனிவாசன் ‘பளிச்’ பதில்

சிக்கப்போகும் அடுத்தடுத்த வி.ஐ.பி க்கள் யார் ? யார் ? பா.ஜ.க பொது செயலாளர் வானதி சீனிவாசன்  ‘பளிச்’ பதில்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Aug 2019 2:59 AM GMT



தம்பரத்துக்கு அடுத்த படியாக நடவடிக்கை எடுக்கப்படுபவர்கள் யார்.. யாராக இருக்கும்?' என்ற கேள்வியை கேட்ட விகடன் பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சுடச்சுட பதில் அளித்தார்.


அப்போது அவர் கூறுகையில்: சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை என்பது, மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டின்பேரில் நடக்கவில்லை. அவர் மீதான வழக்கு என்பது இன்று நேற்றைய விவகாரம் அல்ல. வருடக்கணக்காக நடந்து வரும் வழக்கு அது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.


யார் யாரெல்லாம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார்களோ, யார் மீதான வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருக்கிறதோ அவையெல்லாம் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் கையாளும் வகையில் அந்தந்த துறைகள் பங்காற்ற இருக்கின்றன.


இதில் யார் உள்ளே போவார்கள், யார் வெளியில் இருப்பார்கள் என்றெல்லாம் கணிப்பது எங்களுடைய வேலை அல்ல. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.


தவறு செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபித்துவிட்டு வெளியில் வரட்டும். நீதித்துறையைப் பொறுத்தவரையில் கீழமை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனப் பல அமைப்புகள் உள்ளன.


எனவே, உச்ச நீதிமன்றம் வரையில் சென்று தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கு அந்தந்த துறைகள் பாடுபடும்" என்றவர், ``இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்தும் வேகமாகச் செயல்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.


பாகுபாடு இல்லாமல் அனைவரும் ரெய்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். யாருக்கும் எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டப் போவது கிடையாது" என்றார் உறுதியாக.


Next Story