Top
undefined
Begin typing your search above and press return to search.

சோனியாவின் தொகுதிக்கு 200 சோலார் விளக்குகள்! ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் ஜெட்லி அனுப்பிய கடைசி பரிந்துரை!!

சோனியாவின் தொகுதிக்கு 200 சோலார் விளக்குகள்! ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் ஜெட்லி அனுப்பிய கடைசி பரிந்துரை!!

SG SuryahBy : SG Suryah

  |  26 Aug 2019 11:03 AM GMT



மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குமுன், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதிக்கு 200 சோலார் விளக்குகளை பரிசாக வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு எம்.பி.யும் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை தொகுதிகளுக்கு செலவழிக்க முடியும். இதன்படி தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரேபரேலி தொகுதியில் அதிக திறன் கொண்ட 200 சோலார் விளக்குகளை அமைக்கும்படி ரேபரேலி நிர்வாகத்திற்கு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாளான ஜூலை 30-ஆம் தேதி அன்று அருண் ஜெட்லி கடிதம் அனுப்பி உள்ளார்.


இந்த கோரிக்கை கடிதம் ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று ரேபரேலி மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கிராம வளர்ச்சி கழகத்தின் துணையுடன் இந்த திட்டத்தை நிறைவேற்றுமாறு ரேபரேலி மாவட்ட கலெக்டர் நேஹா சர்மா உத்தரவிட்டுள்ளார்.


இந்த விளக்குகள் தீபாவளிக்கு முன்பே நிறுவப்பட வேண்டும் என்பது அருண் ஜெட்லியின் விருப்பமாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால், விரைவில் இப்பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், விளக்குகள் அமைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோலார் விளக்குகள் அமைப்படும் என அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். அதன் பிறகு மைதானம் ஒன்று இந்த தொகுதியில் அமைக்கப்படும் என கூறி இருந்தார். ஆனால் அதற்குள் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மைதானத்திற்கான பணிகள் துவங்கப்படாமல் போனது.


Next Story