Top
undefined
Begin typing your search above and press return to search.

தொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்! பெயர் பட்டியலை வெளியிட்டார் தமிழிசை

தொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்! பெயர் பட்டியலை வெளியிட்டார் தமிழிசை

SG SuryahBy : SG Suryah

  |  27 Aug 2019 1:53 AM GMT


தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று முன்னர் தமிழக பாஜக முடிவெடுத்திருந்த நிலையில், தற்போது அம்முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க மீண்டும் பங்கேற்கும் என்றும் பங்கேற்பாளர்கள் பெயரையும் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும்,சமவாய்ப்பும் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்தார்.






அன்றிலிருந்து தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை. இந்தநிலையில், தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பில் பங்கேற்பவர்களின் அதிகாரப்பூர்வமாக பட்டியலை தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார். அதில், வானதி ஸ்ரீநிவாசன், நைனார் நாகேந்திரன்,கே.டி.ராகவன். இரா ஸ்ரீனிவாசன், கருநாகராஜன், எஸ்.ஆர்.சேகர், வினோஜ்.பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 27 பேருடைய பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளது.


Next Story