Top
undefined
Begin typing your search above and press return to search.

கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் கமாண்டோக்கள் - இந்தியாவில் உச்சகட்ட பாதுகாப்பு : அரங்கேற்ற இருக்கும் படுபயங்கர திட்டம்!

கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் கமாண்டோக்கள் - இந்தியாவில் உச்சகட்ட பாதுகாப்பு : அரங்கேற்ற இருக்கும் படுபயங்கர திட்டம்!

SG SuryahBy : SG Suryah

  |  29 Aug 2019 10:46 AM GMT


குஜராத்தில் உள்ள கட்ச் வளைகுடா வழியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஊடுருவி உள்ளதாக கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துச் செல்ல முயன்று தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது.


அந்த வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்குள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் மதக்கலவரங்கள், பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டம் வகுத்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.




Next Story