Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான் : ஒரு நாடு கூட ஆதரவு தரவில்லை!! லடாக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு!!

காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான் : ஒரு நாடு கூட ஆதரவு தரவில்லை!! லடாக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு!!

SG SuryahBy : SG Suryah

  |  29 Aug 2019 10:10 AM GMT


உலக நாடுகளிடம் காஷ்மீரில் இந்தியாவின் சீரமைப்பு செயல்பாடுகள் குறித்து புகார் அளித்து வந்தாலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்கவில்லை. ஐ.நா.வுக்கு இது தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.


இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபின், முதல் முறையாக லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்றார்.


லடாக்கில் உள்ள லே பகுதியில் செயல்படும் பாதுகாப்புத் துறையின் உயராய்வு மையம் சார்பில் கிஷான் விஞ்ஞான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.


அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:


" காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். அதில் எப்போதும் சந்தேகம் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக காஷ்மீரின் ஒருபகுதியையும், கில்ஜித் பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. எங்களைக் குறைகூறுவதை விடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறலைத் தடுக்க கவனம் செலுத்த வேண்டும்.


காஷ்மீர் மீது பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும இல்லை. காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் சர்வதேச அளவில் எழுப்பி வரும் பிரச்சினைக்கு எந்த நாடும் அந்த நாட்டுக்கு ஆதரவாக இல்லை.


தீவிரவாதத்தைப் பயன்டுத்தி இந்தியாவைச் சிதைக்க முயலும் பாகிஸ்தானுடன் எப்படி இந்தியாவால் பேச்சு நடத்த முடியும். அண்டை நாடுகளுடன் நல்ல நட்புறவைக் கடைபிடிக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால், முதலில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.


நான் பாகிஸ்தானிடம் கேட்கிறேன், 'எப்போது காஷ்மீர் உங்களைச் சார்ந்ததாக இருந்தது'? காஷ்மீர் எப்போதுமே எங்களிடமே இருக்கிறது. இனிமேலும் எங்களிடமே இருக்கும். அதைத் தட்டிப் பறிக்க எப்போதும், எவராலும் முடியாது.


என்னிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பெர், காஷ்மீருக்கான அரசியலமைப்பு 370 பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ளார்".
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story