Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியையும் சிபிஐ காவலில் கொண்டாடுகிறார் ப.சிதம்பரம்!!

கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியையும் சிபிஐ காவலில் கொண்டாடுகிறார் ப.சிதம்பரம்!!

SG SuryahBy : SG Suryah

  |  30 Aug 2019 11:39 AM GMT



ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


ஐ.என்.எக்ஸ். மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, அவரின் காவல் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று சிதம்பரத்தை கோர்ட்டில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


சிபிஐ தரப்பில் மேலும் பல கேள்விகள் கேட்க வேண்டும். இதனால் சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதனையடுத்து, சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர்-2 (திங்கட்கிழமை) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதனால், கிருஷ்ண ஜெயந்தியை சி.பி.ஐ காவலில் கொண்டாடிய ப.சிதம்பரம், விநாயகர் சதுர்தியையும் (செப்டம்பர்-2) சி.பி.ஐ. காவலில் கொண்டாடுகிறார்.


Next Story