Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவையில் சிக்கினர் 2 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்! கொச்சியில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை!!

கோவையில் சிக்கினர் 2 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்!  கொச்சியில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை!!

SG SuryahBy : SG Suryah

  |  31 Aug 2019 9:28 AM GMT



இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று முஸ்லிம் பயங்கரவாதிகள் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஏராள மானோர் உயிரிழந்தனர்.


இதில் மூளையாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவன் ஜஹ்ரான் ஹாசிம் என்பவனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் கோவையில் இருப்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்தது. இதனைத்தொடர்ந்து கோவையில் விசாரணையை தொடங்கினர் என்.ஐ.ஏ அதிகாரிகள்.


கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன், உக்கடம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த ஷேக் இதாயத் துல்லா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.


விசாரணையில் அவர்கள் கக்கிய தகவல்களி்ன் அடிப்படையில் கோவையில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தினர்.


கோவையை சேர்ந்த உமர் பாரூக், ஷாபர் அலி, ஷமேஷா முபின், முகமது யாசிர், சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. மடிக்கணினி, கைபேசி, சிம்கார்ட், பெண்டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இவர்களில், முகமது யாசிர், சதாம் உசேன் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கொச்சிக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கக்கி உள்ளனர். தமிழகத்தில் என்னென்ன நாசவேலைகளை அரங்கேற்ற திட்டம் தீட்டினார்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இதுவரை எத்தனைபேர்களை சேர்த்து உள்ளனர், இலங்கையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாத் தலைவன் ஜஹ்ரான் ஹாசிம் உடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி போன்ற தகவல்களை அவர்கள் கூறி உள்ளனர்.


இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரரவான மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story