Top
undefined
Begin typing your search above and press return to search.

திருட்டுத்தனமாக இரயிலில் 'ஓசி' பயணம் செய்த தி.மு.க முன்னாள் எம்.பியின் மகன் - அதிரடியாக கைது செய்த காவல்துறை.!

திருட்டுத்தனமாக  இரயிலில்

SG SuryahBy : SG Suryah

  |  31 Aug 2019 1:55 PM GMT


திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் பெயரை பயன்படுத்தி, ரயிலில் விவிஐபி சலுகை பெற்று பயணித்த அவரது ம‌‌கன் கலைராஜை, ரயில்வே அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


பெங்களூருவில் இருந்து இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பெங்களூர் விரைவு ரயிலில், ரயில்வே கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்த திருச்சியைச்சேர்ந்த கலைராஜ் என்பவரது பயண டிக்கெட்டை பரிசோதித்தபோது, அவர் விவிஐபி சலுகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவிஐபி சலுகைக்கான பாஸை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, அது வேறொருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது.


தொடர்ந்து கலைராஜனிடம் விசாரித்தபோது, அவர் திமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்த செல்வராஜின் மகன் என தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் செல்வராஜ் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரயில்வே பாஸை திரும்ப ஒப்படைக்காமல், கலைராஜ் தொடர்ந்து பயணம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


செல்வராஜ் அரசியல் பின்னணி:


திமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி., முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்.செல்வராஜ் (75). அதிமுகவில் இணைந்த இவர் கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். 1980-ம் ஆண்டு திருச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார்.பின்னர் மதிமுக தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்த அவர், பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்து 2006-ம் ஆண்டு முசிறி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று 2006-11-ம் ஆண்டு திமுக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், அவருக்கு ரயில்வே சலுகை அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இதனைப் பயன்படுத்தி அவரும் அவரது மனைவி இருவரும் ஆயுட்காலம் வரை முதல் வகுப்பில் கட்டணமின்றிப் பயணம் செய்ய முடியும். செல்வராஜ் மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு மட்டும் இந்தச் சலுகை இருந்தது. இதனை தான் அவரது மகன் முறைகேடாக பயன்படுத்தி தற்போது இரயில்வே காவல்துறையிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story