Kathir News
Begin typing your search above and press return to search.

உலக நாயகன் வினாயகன்: அவன் துதி போற்றி வணங்கி அகிலத்தின் தலைமையாய் வாழ்வோம்!!

உலக நாயகன் வினாயகன்: அவன் துதி போற்றி வணங்கி அகிலத்தின் தலைமையாய் வாழ்வோம்!!

உலக நாயகன் வினாயகன்: அவன் துதி போற்றி வணங்கி அகிலத்தின் தலைமையாய் வாழ்வோம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Sep 2019 2:36 AM GMT


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே...


உலகம் உருவான நாளை கொண்டாடும் வகையில்தான் அக்காலத்திலிருந்து இன்றைய வரை இந்த நாள் வினாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. உலகம் உண்டான போது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுமே ஒன்றாக பிறந்ததாக கருதப்படுவதால்தான் இருதரப்பிற்கும் பொதுவாக ஆனை முகத்துடனும், மீதி மனித உடலையும் கொண்ட வினாயகனை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான கடவுளாக ஏற்று கணபதி என்கிற பெயரை அவருக்கு சூட்டி அழைத்துள்ளார்கள்.


கணபதி என்றால் கணங்களுக்கெல்லாம் அதிபதி. இவ்விடத்தில் கணம் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் அவர் தலைவராகிறார். அதனால்தான் பிற மதத்தவர்கள் கூட பல இடங்களில் அரச மரத்து பிள்ளையாரை சுற்றி வந்து வணங்குவதுண்டு. பிள்ளையாரை வைத்து இந்து மத வளர்ச்சிக்காக பல கதைகள் , புராணங்கள் இயற்றப்பபட்டிருந்தாலும் தோற்றுவிப்பாளர்களின் நோக்கம் பல்லுயிர் ஓம்புக என்பதை மையமாக வைத்துதான்.


பிள்ளையார் மிகவும் எளிமையானவர். குளத்தங்கரைகளிலும், ஆற்றங்கரையோரத்து அரசமரத்தின் அடியிலும் அனைவருக்கும் அருள் பாலிக்கும் வகையில் அவர் உள்ளார். அவர் அமைதியையும், இயற்கையையும் அதிகம் நேசிப்பவர் என்பதால்தான் இயற்கை எழிலான இடங்களில் மரத்தடியில் உள்ளார்.


இவரை அமைதியாகவும், எளிமையாகவும் வழிபடும்விதத்தில்தான் உலகம் தோன்றிய தினமாக கருதப்படும் வினாயகர் சதுர்த்தியில் அக்காலத்தில் எளிதில் கரையும் வண்ணம் சாதாரண புற்று மண்ணில் பிள்ளையாரை தங்கள் கைகளாலேயே செய்து அவரை வீட்டில் வைத்து பூஜைகள் செய்து படையல் செய்து படைத்து 3 ம்நாள் அன்று தங்கள் வீட்டு வாளிக்குள் வைத்து அவரை கிணற்றில் இறக்கி கரையச் செய்வார்கள். மிக எளிமையாக கொண்டாடப்பட்ட அந்த விழா இன்றைக்கு பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டு ரசாயன்ம் கலக்காத வண்ணங்களாலான பிள்ளையார் சிலைகள்தான் என்று கூறுகின்றனர். வண்ணங்களிலும் ரசாயனம் இல்லை. எண்ணங்களிலும் ரசாயனம் இல்லை என்பதை நம்புவோம். கெடுதிகள் தரும் ரசாயனங்கள் அற்ற, பிளாஸ்டிக் அற்ற ஒரு இயற்கையுடன் ஒன்றிச்செல்லும் உலகம் நமக்கு நிச்சயம் வெகு சீக்கிரத்தில் மீண்டும் வேண்டும் என உலகம் தோன்றிய நாளான இந்த நாளில் அன்றே தோன்றிய ஆதி முதலானவன், ஐங்கரத்தானை உலக நாயகன் வினாயகனை மீண்டும் திரும்ப வேண்டிக்கொள்வோம்..


Next Story
கதிர் தொகுப்பு
Trending News